பகுதி நேர வேலைகள் பெறுவதற்கான வழிமுறைகளை (best part time jobs in tamil) இந்த வீடியோ விவரிக்கிறது.
நீங்கள் படித்துக் கொண்டிருக்கிறீர்களா? வேலை பார்த்துக் கொண்டிருக்கிறீர்களா? அல்லது நேரத்தை வீணடிக்கிறோம் என்று யோசித்துக் கொண்டிருக்கிறீர்களா? கையில் கூடுதலாக பணம் தேவை எனக் கருதிக்கொண்டிருக்கிறீர்களா? இதற்கெல்லாம் ஒரே தீர்வு பகுதி நேர வேலை. பகுதி நேர வேலைகளை ( how to find a part-time job in tamil ) தேடுபவராக இருந்தால் இந்த வீடியோ உங்களுக்கானது தான்.
பகுதி நேர வேலையின் நன்மைகள்:
பகுதி நேர வேலைகளில் பல நன்மைகள் உள்ளன. இதன்மூலம் கூடுதலாக பணம் ஈட்டலாம், புது திறன்களை வளர்த்துக் கொள்ளலாம், சிறந்த வேலை/ தொழில் அனுபவம் பெறலாம். அதுமட்டுமல்லாமல் வீட்டில் பொழுதுபோகாமல் இருந்தால் உங்கள் நேரத்தை போக்குவதற்கும் இது ஒரு சிறந்த வழி.
தொழில் தொடங்குவது :
பகுதி நேர வேலையில் புதிதாக எதையும் செய்ய வேண்டிய அவசியம் இல்லை. உங்களுக்குள் இருக்கும் திறன்களை வைத்து பகுதி நேர தொழில் தொடங்கலாம்.
வேலை வாய்ப்புகளை தேடுதல்
கல்லூரி போன்று கேம்பஸ் இண்டர்வியூ , பிளேஸ்மெண்ட்ஸ் போன்ற வேலைவாய்ப்புகள் தானாக தேடி வருவதில்லை. நாம் தான் அதை தேடிச் செல்ல வேண்டும். ஆட்கள் தேவை போன்ற விளம்பரங்கள், இமெயிலில் வரும் வேலைவாய்ப்புகள், ஆன்லைனில் வேலை தொடர்பான பட்டியல்களை பார்ப்பது , உங்கள் திறனை வைத்து தொழிலில் ஈடுபடுவது போன்றவற்றின் மூலம் நீங்கள் பகுதி நேர வேலைகளை தேடி எடுக்கலாம். இதில் நீங்கள் கற்று கொண்ட திறன்கள் அல்லது கற்றுக் கொள்ள நினைக்கும் திறன்கள் தொடர்பான வேலைகளாக இருக்கும்.
சரியான நேரத்தை ஒதுக்குதல்
வேலை கிடைத்ததும் அதில் உடனே சேர்வது சற்று கடினம். நீங்கள் செய்யும் வேலையோ அல்லது படிப்புக்கு ஏற்றாற்போல் தான் அதில் சேரமுடியும். நமக்கு தகுந்த நேரத்தில் பகுதி நேர வேலையை எவ்வாறு தேடுவது என்று யோசிக்கிறீர்களா? ஜாப் லிஸ்டிங்க்ஸில் வேலைத் தேடும் போது அதில் பார்ட் டைம் நேரம் , ஷிப்ட் டைம் போன்றவை குறிப்பிடப் பட்டிருக்கும். அதை பார்த்து நீங்கள் தெரிந்துக் கொள்ளலாம்.
உங்களுடைய நேரம் மற்றும் திட்டமிடுதல் பகுதி நேர வேலைக்கு மிகவும் அவசியமான ஒன்று.
பணி நேரத்தை தெளிவாக தெரிவித்தல்
இண்டர்வியூவில் எப்போது? எந்தெந்த நேரங்களில் உங்களால் வேலை செய்யமுடியும், முடியாது என்பதை தெளிவாக குறிப்பிட வேண்டும். இது மிகவும் அவசியமானது. ஏனென்றால் அதற்கேற்றாற்போல் உங்களுக்கு வேலையை பிரித்துக் கொடுக்க உதவும். அதேபோல் நேரத்தைத் தாண்டி கூடுதல் வேலையையும் நிறுவனம் கொடுக்காது.
ஆர்வத்தை வெளிப்படுத்துதல்
நீங்கள் இந்த பகுதி நேர வேலையை ஆர்வமாக செய்வீர்கள் எனவும், வேலையை விட்டு சீக்கிரம் வெளியேற மாட்டேன் எனவும் உத்தரவாதத்தோடு நீங்கள் தெரிவித்தால் வேலை கிடைப்பதற்கான வாய்ப்புகள் அதிகமாகும்.
முழு நேர வேலையாக கருதுதல்
பகுதி நேர வேலையை முழு நேர வேலையாக கருத வேண்டும். ரெசியூம் எடுத்துச் செல்லுதல், கவர் லெட்டர், போர்ட்ஃபோலியோ, சரியான நேரத்தில் விண்ணப்பத்தை சமர்ப்பிப்பது மூலம் முழு நேர வேலையைப் போலவே பகுதி நேர வேலைக்கும் இதனை கடைப்பிடியுங்கள். ஒரு வேளை லோகோ டிசைனிங், ஃபோட்டோகிராஃபி போன்ற வேலைகளை பகுதி நேரத்தில் செய்தால் அதில் முழு ஈடுபாட்டுடன் செய்யுங்கள். ஏனெனில் வரும் காலத்தில் இந்த வேலைகள் கூட உங்கள் முழு நேர வேலையாக மாறலாம்.
இண்டர்வியூவை எதிர்கொள்ளுதல்
முழு நேர வேலைக்கான நேர்முகத் தேர்வை எப்படி சரியான உடை அணிதல், தேவையான கோப்புகள், சரியான நேரத்திற்கு செல்லுதல் போன்றவற்றோடு அணுகுவீர்களோ? அதேபோல் பகுதி நேர வேலையையும் அணுக வேண்டும். ஏனென்றால் இந்த பகுதி நேர வேலையும் உங்களுக்கு நல்ல பணி அனுபவம் கொடுக்கும். இதனால் உங்கள் ரெசியூம் கூடுதல் கவனம் பெறும்.
பகுதி நேர வேலைவாய்ப்புகள், அதனை பெறும் வழிமுறைகள் (part time online jobs for college students in tamil) குறித்து தெரிந்து கொண்டீர்கள். இதுமாதிரி பகுதி நேர வேலை (online part time jobs for students in tamil) ஒன்றை தேர்ந்தெடுத்தால் உங்கள் கெரியருக்கு அது மிகவும் பயனுள்ளதாக இருக்கும். ஏனெனில் இது உங்கள் கெரியருக்கு ஒரு டிரைலராக இருக்கலாம், ரெசியூமில் பணி அனுபவம் பெறலாம், வரும் காலங்களில் இதுவே உங்கள் கெரியராக மாறவும் பல வாய்ப்புகள் உள்ளன. மேலும் கெரியர் குறித்து பல பயனுள்ள தகவல்களை தெரிந்து கொள்ள Arrear Irundalum Career சேனலை subscribe செய்யுங்கள்
How To Find A Part-time Job
Looking to earn some extra pocket money, or add to your income with your spare time? You can do so while still developing your skills. Keep an eye out for them through advertisements, job search portals, offline listings and more. Check out our video for more tips –
Benefits of a Part-time Job:
Some of the advantages include a better work experience, added income and a great skill to develop and learn.
Start Your Own Business:
You can stop looking for a part-time job, and start one of your own if you possess the right skills and business requirements.
Proper Time Allocation:
Be patient and scour through websites searching for the right job that will suit your skills and your availability. Do not compromise on your daily schedule.
Proper Communication:
After finding one that suits you, there will be tests or interviews or both, sometimes. Communicate your needs and skills clearly to avoid any confusion at later stages.
Interest:
Express your interest in the job. This will assure your employer that you are willing to stay in the job without leaving at a later point of time.
Documents:
You must submit the required documents, and a cover letter and portfolio are equally important.
Interview:
An interview is an important stage for your progress. Dress with the proper attire and exude your confidence through your answers. Provide honest answers to your employer, and bring any important documents.
We hope you enjoyed our video! Don’t forget to like, comment and share. Don’t forget to subscribe to our channel –
https://www.youtube.com/channel/UCcc7tmGh5cCPylLQHIHtyEQ?sub_confirmation=1
Leave a Reply