விளையாட்டு துறையில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள் | Career tips in Sports (Tamil)
விளையாட்டு துறையில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள் (career in sports tamil ) மற்றும் அவை சார்ந்த படிப்புகள் குறித்து இந்த வீடியோவில் நீங்கள் தெரிந்து கொள்ளலாம்
அரசு மற்றும் தனியார் துறை சார்ந்த அலுவலகங்களில் விளையாட்டுக்கென பலவித வேலைவாய்ப்புகள் கொட்டிக்கிடக்கின்றன. விளையாட்டு துறையில் வெற்றி பெற்று சாதித்தவர்கள், அவர்கள் வாங்கும் விருதுகள், நடிக்கும் விளம்பரங்கள் உள்ளிட்டவைகளை கண்டு நமக்கும் இதில் ஒரு கெரியர் வேண்டும் என்று நினைப்பவரா நீங்கள். இந்த வீடியோ உங்களுக்கானது.
பொதுவாக விளையாட்டு துறையில் ( sports career tips in tamil ) வேலை கிடைக்க வேண்டும் என்றால் முக்கியமான திறன்கள் நமக்கு இருப்பது அவசியம்.
உடற்கல்வி படிப்பு: பிளஸ் 2 க்கு பின், உடற்கல்வி படிப்புகளில் இளநிலை, முதுநிலை பட்டம் பெறலாம். ஒரு வேளை எம்பிபிஎஸ் படித்திருந்தால் ஸ்போர்ட்ஸ் மெடிசின் டிப்ளமோ கோர்ஸ் கூட படிக்கலாம்
வேலைவாய்ப்பு: உடற்கல்வி படிப்பில் இளங்கலை/ முதுநிலை பட்டம் பெற்றவர்கள் போகக்கூடிய வேலைகள்:
தடகள பயிற்சியாளர்
விளையாட்டு பயிற்சியாளர் மற்றும் உதவி பயிற்சியாளர்
தடகள இயக்குனர்
உடற்கல்வி ஆசிரியர்
மார்க்கெட்டிங் மற்றும் விளம்பர ஒருங்கிணைப்பாளர்
தடகள நிகழ்ச்சி மேம்பாட்டு இயக்குனர்
விளையாட்டு தகவல் இயக்குநர்
இதைத் தவிர உடல்நலம் மற்றும் உடற்பயிற்சி சார்ந்த வேலைவாய்ப்புகள் உள்ளன.
உடற் சிகிச்சை நிபுணர்
மருத்துவ உதவியாளர்
விளையாட்டு மருத்துவ உதவியாளர்
உதவி தடகள பயிற்சியாளர்
உடற் சிகிச்சை உதவியாளர்
ஸ்போர்ட்ஸ் மசாஜ் தெரபிஸ்ட்
விளையாட்டு மற்றும் உடற்பயிற்சி ஊட்டச்சத்து வல்லுநர்
வலிமை மற்றும் சீர் பயிற்சியாளர்
உடற்பயிற்சி வல்லுநர் விளையாட்டு மருத்துவர்
விளையாட்டு உளவியல் நிபுணர்
ஊடகத் துறை: ஊடகத் துறையில் விளையாட்டு சார்ந்த பல வேலைவாய்ப்புகள் உள்ளன. ஒரு வேளை நீங்கள் நல்ல உடற்பயிற்சியுடன் சிறப்பாக விளையாடி வந்தால், சிறந்த தடகள வீரராகவும் திகழலாம். கூடுதலாக பிஸ்னஸ், உடற்பயிற்சி மற்றும் ஓர் அணியை நிர்வகிக்கும் திறன்கள் இருந்தால் இன்னும் பல வேலைகளுக்கு நீங்கள் செல்லலாம்.
பயிற்சியாளர்
வலிமை மற்றும் சீர் பயிற்சியாளர்
சாரணர்
அணித் தலைவர்
பொது மேலாளர்
பிஸ்னஸ் மேனேஜர்
மார்க்கெட்டிங் இயக்குனர்
புரமோஷன் டைரக்டர்
டிக்கெட் ஆபரேஷன் மேனேஜர்
பயண செயலாளர்
செயல் இயக்குனர்
ஸ்டேடியம் மேலாளர்
விளையாட்டு நிகழ்வுகள் ஒருங்கிணைப்பாளர்
உபகரணங்கள் மேலாளர்
ஸ்கோர்போர்டு ஆப்ரேட்டர்
பப்ளிக் அட்ரஸ் அனவுன்சர்
விளையாட்டு துறையை விளையாட்டாக ( career in physical education in tamil ) தான் நாம் பார்த்து வருகிறோம். உண்மையில் பலர் இந்த துறையில் பணியில் உள்ளனர். உங்களுக்கு ஒரு விளையாட்டு வீரராக முடியவில்லை என்ற ஏக்கமா? கவலையை விடுங்க, மேலே கொடுக்கப்பட்டுள்ள பட்டியலில் ஏதாவது ஒன்றை தேர்ந்தெடுத்து விளையாட்டு துறையில் சாதியுங்கள். மேலும் கெரியர் குறித்த பல பயனுள்ள தகவல்களுக்கு Arrear Irundalum Career சேனலை Subscribe செய்யுங்கள்
Leave a Reply