சிவில் சர்வீசஸ்

தேர்வு

ஐஏஎஸ், ஐபிஎஸ் ஆக விருப்பமா?

இந்தியாவின் ஆளுமை மிக்க அதிகாரிகளை உருவாக்கவே, இந்திய அரசுப் பணியாளர் தேர்வாணயம் ஒவ்வொரு ஆண்டும் யு.பி.எஸ்.சி  தேர்வை     ( Best Way to crack UPSC Exam in Tamil ) நடத்துகிறது. தேசிய அளவில்  நடத்தப்படும் இந்த தேர்வை வெற்றிகரமாக நிறைவு செய்பவர்கள், இந்திய ஆட்சிப் பணிக்கு தேர்வாகின்றனர். மத்தியிலும், மாநிலத்திலும் மக்களால் தேர்வு செய்யப்படும் அரசு, அதே மக்களுக்காக திட்டமிடும் நலத் திட்டங்களையும், இதர விஷயங்களையும் உரிய முறையில் கொண்டு சேர்க்க உதவப் போவதும் யு.பி.எஸ்.சி  தேர்வில் வெற்றி பெறுபவர்களே. 

கல்வித் தகுதி

அடிப்படை கல்வியும், ஏதாவது ஒரு பட்டப்படிப்பும் முடித்த யார் வேண்டுமானாலும், யு.பி.எஸ்.சி  தேர்வை எழுதி வெற்றி பெறலாம். ஆனால், உரிய பயிற்சியும், முயற்சியும் இல்லாமல் யு.பி.எஸ்.சி தேர்வில் ( how to crack UPSC in first attempt in tamil )  வெற்றி பெறுவது சாத்தியமில்லை. பரந்துபட்ட இந்தியாவில், பல்வேறு இன, மொழி மக்கள் வசிக்கும் பகுதிகளில், ஆட்சியாளர்களின் அதிகாரமிக்க பிரதிநிதிகளாக செயல்படப் போகிறவர்கள், அனைத்து விஷயங்களையும் அறிந்திருக்க வேண்டியதன் அவசியமும் இந்த தேர்வு மிக கடினமாக இருப்பதற்கு முக்கிய காரணம். 

சிவில் சர்வீசஸ் தேர்வு - வரலாறு

மத்திய ஆட்சிப்பணி ஆணையமானது ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில், 1854ம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்டு 1855 முதல் தேர்வு நடத்தப்பட்டு வருகிறது.1950, ஜனவரி 26க்குப்பின் இந்திய சட்ட விதி 378-ன் படி, மத்திய ஆட்சிப்பணி ஆணையமாக மாற்றம் பெற்றது. ஒவ்வொரு கட்டத்திலும் சிறு சிறு மாற்றங்களை சந்தித்து, இன்று விருட்சமாக வளர்ந்து நிற்கிறது UPSC தேர்வாணையம்.

தகுதிகள் - வயது வரம்பு

கல்லூரி கல்வியை முடித்ததும் சிவில் சர்வீஸ் தேர்வுகளுக்கு தயாராகும் காலம் மாறி, இன்று பள்ளியில் படிக்கும் போதே IAS/IPS ஆக வேண்டும் என்ற கனவுடன் மாணவர்கள் தயாராகின்றனர். சிவில் சர்வீசஸ் தேர்வுகளில் ( how to prepare for UPSC in tamil )  பங்கு பெறுவதற்கு இந்தியக் குடிமகனாக இருப்பதும், குறைந்தபட்சம் 21 வயது பூர்த்தியாகி இருப்பதும் அவசியம். 30 வயது வரை பொதுப்பிரிவினர் சிவில் சர்வீஸ் தேர்வினை எழுதலாம்.

3.1 வயது வரம்பு தளர்ச்சி

எஸ்.சி. எஸ்.டி. பிரிவினர் 35 வயதுவரை இத்தேர்வை எழுதலாம். இதர பிற்படுத்தப்பட்டோர் (OBC) அதாவது தமிழகத்திலுள்ள பிற்படுத்தப்பட்டோர் (BC) மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் (MBC) 33 வயது வரை சிவில் சர்வீஸ் தேர்வை எழுதலாம். 

சிவில் சர்வீஸ் தேர்வை எத்தனை முறை எழுதலாம் என்பதற்கும் விதிமுறைகள் உள்ளன.  அதன்படி பொதுப்பிரிவினர் 4 முறை மட்டுமே இத்தேர்வை எழுத அனுமதிக்கப்படுவர். இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் (OBC) தங்களின் வயது வரம்பிற்கு உட்பட்டு 7 முறை சிவில் சரிவீஸ் தேர்வை எழுதலாம்.

SC/ST பிரிவினர் தங்கள் வயது வரம்பிற்கு உட்பட்டு எத்தனை முறை வேண்டுமானாலும் சிவில் சர்வீஸ் தேவை எழுதலாம்.

சிவில் சர்வீஸ் தேர்வு அவ்வப்போது மாற்றியமைக்கப்படுவது ஏன்?

சிவில் சர்வீஸ் தேர்வின் ( strategy for UPSC in tamil )  தன்மையும், காலத்திற்கு ஏற்றவாறு பல்வேறு குழுக்களின் பரிந்துரைப்படி அவ்வப்போது மாற்றி அமைக்கப்படும். தகுதி உடைய  அலுவலர்களை தேர்ந்தெடுப்பதே இதன் முக்கிய நோக்கம் ஆகும். பொதுவாக சிவில் சர்வீஸ் தேர்வுகளில் அன்றாட நடப்புகள், சுற்றுச்சூழல், நவீன தொழில்நுட்பத்திற்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது

இதுதவிர, நெறிமுறைகள் (Ethics), ஒருமைப்பாடு (Integrity) உளச்சார்பு (aptitude) போன்ற தனிமனித மேம்பாடு மற்றும் சமூகம் சார்ந்த மனஇயல்பு கொண்டவர்களை இனங்காண உதவும் வகையில் பாடப்பிரிவுகளாக சேர்க்கப்பட்டுள்ளதும் குறிப்பிடத் தகுந்ததாகும். ஒரு நாட்டின் வளர்ச்சி ஒருங்கிணைந்த வளர்ச்சியாக இருக்க வேண்டும்.

படிக்கும் பழக்கம் (Study habits) படிக்கும் ஆற்றல் (Study skills) ஆகியவற்றைப் பொறுத்தே சிவில் சர்வீசஸ் தேர்வில் வெற்றி தீர்மானிக்கப்படும். பல்கலைக்கழகத் தேர்வுக்கும், போட்டித் தேர்வுக்கும் நிறைய வித்தியாசங்கள் உண்டு. போட்டித் தேர்வுகள் ஆராய்ந்தறியும் ஆற்றல், சிந்தனை ஒழுக்கம், நடுநிலையோடு ஒரு கருத்தை புரிந்து கொண்டு நிறை, குறைகளை வெளிப்படுத்தும் நேர்த்தி, கேள்விகளை புரிந்துகொண்டு கருத்துகளை கோர்வையாக நடைமுறை உதாரணங்களுடன் வெளிப்படுத்தும் ஆற்றல் போன்றவற்றையே சிவில் சர்வீஸ் தேர்வில் வெற்றியைப் பெற்றுத் தரும்.

சிவில் சர்வீஸ் தேர்வின் ( strategy for UPSC in tamil )  தன்மையும், காலத்திற்கு ஏற்றவாறு பல்வேறு குழுக்களின் பரிந்துரைப்படி அவ்வப்போது மாற்றி அமைக்கப்படும். தகுதி உடைய  அலுவலர்களை தேர்ந்தெடுப்பதே இதன் முக்கிய நோக்கம் ஆகும். பொதுவாக சிவில் சர்வீஸ் தேர்வுகளில் அன்றாட நடப்புகள், சுற்றுச்சூழல், நவீன தொழில்நுட்பத்திற்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது

இதுதவிர, நெறிமுறைகள் (Ethics), ஒருமைப்பாடு (Integrity) உளச்சார்பு (aptitude) போன்ற தனிமனித மேம்பாடு மற்றும் சமூகம் சார்ந்த மனஇயல்பு கொண்டவர்களை இனங்காண உதவும் வகையில் பாடப்பிரிவுகளாக சேர்க்கப்பட்டுள்ளதும் குறிப்பிடத் தகுந்ததாகும். ஒரு நாட்டின் வளர்ச்சி ஒருங்கிணைந்த வளர்ச்சியாக இருக்க வேண்டும்.

படிக்கும் பழக்கம் (Study habits) படிக்கும் ஆற்றல் (Study skills) ஆகியவற்றைப் பொறுத்தே சிவில் சர்வீசஸ் தேர்வில் வெற்றி தீர்மானிக்கப்படும். பல்கலைக்கழகத் தேர்வுக்கும், போட்டித் தேர்வுக்கும் நிறைய வித்தியாசங்கள் உண்டு. போட்டித் தேர்வுகள் ஆராய்ந்தறியும் ஆற்றல், சிந்தனை ஒழுக்கம், நடுநிலையோடு ஒரு கருத்தை புரிந்து கொண்டு நிறை, குறைகளை வெளிப்படுத்தும் நேர்த்தி, கேள்விகளை புரிந்துகொண்டு கருத்துகளை கோர்வையாக நடைமுறை உதாரணங்களுடன் வெளிப்படுத்தும் ஆற்றல் போன்றவற்றையே சிவில் சர்வீஸ் தேர்வில் வெற்றியைப் பெற்றுத் தரும்.

தேர்வுத் திட்டம்

இந்திய ஆட்சிப் பணிக்கு வருபவரின் அறிவுக் கூர்மையை சோதிக்க 3 வெவ்வேறு முறைகளில் தேர்வை UPSC நடத்துகிறது. அதன் படி, முதனிலைத் தேர்வு (Preliminary Examination), பிரதானத்தேர்வு (Main Exam), நேர்முகத்தேர்வு (Personality Test) என 3 கட்டங்களாக தேர்வு நடத்தப்படும். 

சிவில் சர்வீஸ் தேர்வுக்கு விண்ணப்பிப்பதற்கு முன்பாகவே, என்ன விருப்பப் பாடத்தை தேர்வு செய்யப் போகிறோம், Premilinary தேர்வுக்கு எந்த வகையில் படிக்க வேண்டும் என்பது பற்றி திட்டமிட வேண்டியது அவசியம். பாடத்திட்டம் குறித்த புரிதலும், தேர்வு முறைகள் குறித்த விழிப்புணர்வும் சரியாக இருந்தால் மட்டுமே சிவில் சர்வீஸ் தேர்வுக்கு விண்ணப்பிக்க வேண்டும். 

சிவில் சர்வீஸ் தேர்வுகளில் வெற்றி பெற கடுமையான உழைப்பும், திட்டமிட்ட செயல்பாடுகளும் மிகவும் அவசியமாகும். ஒரு பாடத்தையும், தேர்வுகளையும் அணுகுவதற்கு தேவையான ஒரு அட்டவணை ஒன்றை தயாரித்துக் கொள்வது அவசியம். 

முதல்நிலைத் தேர்வில் வெற்றி பெற்றவர்கள் அனைவருமே, முதன்மைத் தேர்வில் வெற்றி பெறுவதில்லை. இதே நிலை தான் நேர்முகத் தேர்விலும் இருக்கிறது. முதன்மைத் தேர்ல் வெற்றி பெற்றவர்களில் மூன்றில் ஒரு பங்கு தேர்வர்கள் மட்டுமே நேர்முகத் தேர்வை வென்று ஆட்சிப் பணியை பெறுகின்றனர். 

பொதுவாக திட்டமிட்டு படித்தால் மட்டுமே சிவில் சர்வீஸ் தேர்வில்  ( how to prepare for upsc exam without coaching in tamil ) வெற்றி பெறலாம் என்பது அனுபவப்பூர்வமான விஷயமாக இருந்தாலும், படிக்கும் போது சில நுட்பமான முறைகளையும் கையாள வேண்டியிருக்கும். செய்தித் தாள் படிப்பது, கருத்து ரீதியாக விவாதிப்பதன் மூலமும் நேர்முகத் தேர்விற்கு மறைமுகமாக தயாராகலாம்.

பள்ளிக்கூடத்தில் படிக்கும் கல்வி தான் பெரும்பாலான தேர்வுகளுக்கு அடிப்படையாக இருக்கிறது. பள்ளிப் படிப்பை புரிந்துகொண்டு படிக்கும் மாணவர்களுக்கு அனைத்து போட்டித் தேர்வுகளுமே எளிதாக இருக்கும்.

முதல்நிலைத் தேர்வு
(Preliminary Examination)

UPSC முதல்நிலைத் தேர்வு இந்தியாவின் பல மையங்களில் நடைபெறும். காலை நேரத்தில் நடக்கும் விருப்பப் பாடத்தில் 120 கேள்விகளும், மாலை நேரத்தில் நடக்கும் பொது அறிவுத் தேர்வில் 150 கேள்விகளும் கேட்கப்படும். விருப்பப் பாடத்திற்கு 300 மதிப்பெண்களும், பொது அறிவுத்தாளுக்கு 150 மதிப்பெண்களும் என்று மொத்தம் 450 மதிப்பெண்களுக்கு முதல்நிலைத்தேர்வு நடத்தப்படுகிறது. 

நாட்டு நடப்பு, உலக நடப்புகள், இந்திய வரலாறு மற்றும் இந்திய தேசிய இயக்கம், இந்திய, உலக புவியியல், இந்திய அரசியல் மற்றும் நிர்வாகம், அரசியல் அமைப்பு, அரசியல் சாசனம், பஞ்சாயத்து ராஜ், பொதுக்கொள்கைகள் உரிமைகள் சார்ந்த விஷயங்கள், சமூக, பொருளாதார மேம்பாடு, உள்ளடக்குதல், மக்கள்தொகை விபரங்கள், வறுமை, சுற்றுப்புறச்சூழல் பிரச்னைகள், காலநிலை மாற்றம், 

பொது அறிவியல் போன்றவை சிவில் சர்வீஸ் முதல்நிலைத் தேர்வில் தாள் -1ல் பொது அறிவுப் பிரிவில் அட்டவணைப்படுத்தப்பட்டு உள்ளன. இந்த தாளிற்கு (Paper -1) தயாராவதற்கு எந்த ஒரு பாடத்திலும் சிறப்புத்திறன் தேவை கிடையாது. நாளிதழ்கள், இணையதளங்கள், ஊடகங்கள் மூலம்,  நாட்டு நடப்பு, உலக நடப்பு குறித்து அறியலாம். 

சிவில் சர்வீசஸ் முதனிலைத் தேர்வில் ஒரு விருப்பப் பாடத்தை தேர்வு செய்ய வேண்டும். அதன்படி,

1. வேளாண்மை ( Agriculture )

2. கால்நடை பராமரிப்பு மற்றும் மருத்துவம் ( Animal Husbandry & Veterinary Science )

3. தாவரவியல் ( Botany )

4. வேதியியல் ( Chemistry )

5. கட்டுமானப் பொறியியல் ( Civil Engineering )

6. வணிகவியல் ( Commerce )

7. பொருளாதாரம் ( Economics )

8. மின் பொறியியல் ( Electrical Engineering )

9. புவியியல் ( Geography )

10. புவி அமைப்பியல் ( Geology )

11. இந்திய வரலாறு ( Indian History )

12. சட்டம் ( Law )

13. கணிதம் ( Mathematics )

14. எந்திரப் பொறியியல் ( Mechanical Engineering )

15. மருத்துவ அறிவியல் ( Medical Science )

16. தத்துவ இயல் ( Philosophy )

17. இயற்பியல் ( Physics )

18. அரசியல் அறிவியல் ( Political Science )

19. உளவியல் ( Psychology )

20. பொது நிர்வாகம் ( Public administration )

21. சமூகவியல் ( Sociology )

22. புள்ளியியல் ( Statistics )

23. விலங்கியல் ( Zoology )

போன்ற விருப்பப் பாடங்கள் கொடுக்கப்பட்டுள்ளன. இதில் நீங்கள் விரும்பும் விருப்பப் பாடத்தை தேர்ந்தெடுத்து விண்ணப்பத்தில் குறிப்பிட வேண்டும்.

6.1 முதல்நிலைத் தேர்வு - விருப்பப் பாடம் தேர்வு செய்யும் முறை

சிவில் சர்வீஸ் தேர்வுக்கு எந்த விருப்பப் பாடத்தைத் (Optional Subject) தேர்ந்தெடுப்பது என்பது பலருக்கும் சவாலான விஷயமாக அமைந்து விடுகிறது. கல்லூரிப் படிப்பில் சேரும் போதே, சிவில் சர்வீஸ் தேர்வை எழுதும் லட்சியத்துடன் இருப்பவர்கள், அதற்கு ஏற்ற வகையில் விருப்பப் பாடத்தை தேர்வு செய்தால், கை மேல் பலன் கிடைக்கும் என்பது சிவில் சர்வீஸ் தேர்வில் ( best strategy for UPSC preparation in tamil ) வெற்றி பெற்றவர்களின் அனுபவமாக இருக்கிறது.  எந்த விருப்பப் பாடத்தை ஆர்வத்துடன் எடுத்தால் நிறைய விஷயங்களைக் கற்றுக் கொள்ள முடியும் எனப் பாருங்கள்.  தமிழ் இலக்கியம் உள்ளிட்ட பல பாடங்கள் இந்தப் பட்டியலில் இருக்கின்றன.கலை பாடங்களான வரலாறு, புவியியல், சமூகவியல், மானுடவியல் போன்ற பாடங்களையும் தேர்வு செய்யலாம், அறிவியல் ஆரவம் உள்ளவர்கள் இயற்பியல், வேதியியல், கணிதம் போன்றவற்றையும் விருப்ப பாடமாக தேர்வு செய்யலாம். இது எல்லாமே உங்களுடைய விருப்பத்தைப் பொறுத்துதான். 

6.2 எவ்வளவு மணி நேரம் படிக்க வேண்டும்?

UPSC தேர்வுக்கு தயாராகும் லட்சியம் கொண்டவர்கள், படிப்பதற்கு யோசிப்பதில்லை என்றாலும்  கூட ஒவ்வொரு நாளும் எவ்வளவு நேரம் படிக்க வேண்டும் என்ற குழப்பத்தில் சிக்கி விடுகின்றனர். பொதுவாக படிப்பதை கிரகித்துக் கொள்ளக்கூடிய தன்மை நபருக்கு,  நபர் வித்தியாசப்படும் என்பதால், எவ்வளவு நேரம் படிக்க வேண்டும் என்பதை சம்பந்தப்பட்டவரின் மனது தான் தீர்மானிக்க வேண்டும். ஏனென்றால், படிக்கும் விஷயத்தை நினைவில் கொள்வதற்கு மனது ஒத்துழைக்காவிட்டால், ஒரு மணி நேரம் படித்தாலும், ஒரு நாள் முழுவதும் படித்தாலும் அது வீண் என்றே கருத வேண்டும். 

லட்சியம் பெரிதாக இருப்பதால், மனதை ஒருமுகப்படுத்தி படிக்க வேண்டியது அவசியம். எந்த ஒரு விஷயமும் முதல் நாளிலேயே நமக்கு கை வந்து விடாது என்பதால், ஆரம்பத்தில் குறைந்த நேரம் படிக்க முடிந்தாலும், அந்த கால அவகாசத்தை படிப்படியாக அதிகரிக்க வேண்டும். 

பொது அறிவு, அன்றாக நிகழ்வுகளை அறிந்து கொள்ள நாளிதழ்களைப் படிக்கலாம். அதே நேரம் பள்ளிக் கல்வியிலும் கவனம் கொள்ள வேண்டும். பள்ளிப் பாடங்களில் தான் அடிப்படையான விஷயங்கள் இருக்கின்றன என்பதால், அவற்றை முழுமையாக புரிந்து படித்தால், பல கேள்விகளுக்கு அவை மூல பதிலாக இருக்கும். 

முதல்நிலைத் தேர்வில் வெற்றி பெறுபவர்கள் பிரதான தேர்வை எதிர்கொள்வது எப்படி என்பதை இனி பார்க்கலாம்….

பிரதானத் தேர்வு (Main Exam)

சிவில் சர்வீசஸ் முதனிலைத் தேர்வில் வெற்றி பெற்றதாக தேர்வாணையத்தால் அறிவிக்கப்பட்டவர் மட்டுமே பிரதானத் தேர்வை எழுதத் தகுதிப் பெற்றவர் ஆவார். 

பிரதானத் தேர்வு என்பது எழுத்து மற்றும் நேர் முகத்தேர்வு ஆகிய இரண்டு தேர்வு முறையையும் உள்ளடக்கியது. எத்தனை பணியிடங்கள் காலியாக உள்ளனவோ அதைவிட 12 அல்லது 13 மடங்கு விண்ணப்பதாரர்கள் பிரதானத் தேர்வுக்கு அனுப்ப தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.

இந்த பிரதானத் தேர்வுதான் உங்களின் வெற்றி மற்றும் பணியிடங்களை தீர்மானிக்கிறது. இது முழுக்க முழுக்க விரிவாக விடை எழுதும் கட்டுரை வடிவிலான எழுத்துத் தேர்வு. இதில் உங்களின் பதில் அளிக்கும் திறனே முக்கியமானதாகும்.

பிரதான தேர்வுக்கு விருப்பப்பாடத்திற்கு  பட்டியலிலிருந்து ஏதேனும் 2 விருப்பப் பாடங்களை தேர்ந்தெடுக்கலாம்.

7.1 பிரதானத் தேர்வுக்கான விருப்பப் பாடங்கள்

1. வேளாண்மை (Agriculture)

2. கால்நடைப் பராமரிப்பு மற்றும் மருத்துவம் (Animal Husbandry & Veterinary)

3. மானிடவியல் (Anthropology)

4. தாவரவியல் (Botany)

5. வேதியியல் (Chemistry)

6. கட்டடப் பொறியியல் (Civil Engineering)

7. வணிகவியலும் கணக்கியலும் (Commerce & Accountancy)

8. பொருளாதாரம் (Economics)

9. மின் பொறியியல் (Electrical Engineering)

10. புவியியல் (Geography)

11. புவியமைப்பியல் (Geology)

12. வரலாறு (History)

13. சட்டம் (Law)

14. மேலாண்மை (Management)

15. கணிதம் (Mathematics)

16. எந்திரப் பொறியியல் (Mechanical Engineering)

17. மருத்துவ அறிவியல் (Medical Science)

18. தத்துவம் (Philosophy)

19. இயற்பியல்(Physics)

20. அரசியல் மற்றும் பன்னாட்டுத் தொடர்புகள் (Political and International Relations)

21. உளவியல் (Psychology)

22. பொது நிர்வாகம்(Public Administration)

23. சமூகவியல் (Sociology)

24. புள்ளியியல் (Statistics)

25. விலங்கியல் (Zoology)

26. இலக்கியம் (Literature)

7.2 தாய்மொழியான தமிழில் சிவில் சர்வீஸ் தேர்வை எழுதினால், வெற்றி பெற முடியுமா?

முதல்நிலைத் தேர்வு ஆங்கிலம் மற்றும் ஹிந்தியில் மட்டும் எழுத வேண்டும் என்பதால், அடிப்படை ஆங்கில அறிவு அவசியம். ஆனால் முதன்மைத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வை தமிழிலேயே எழுதலாம். 

தமிழில் தேர்வெழுதினால் மதிப்பெண் குறைந்து விடுமோ? என்ற அச்சம் வேண்டாம். தமிழில் தேர்வு எழுதும்போது கட்டுரைத் தாள் தேர்வில் சிறப்பாக எழுதுவதோடு, சிறப்பாக கருத்துகளையும் வெளியிட முடியும். மொழி ஆளுமையை நன்றாக வளர்த்துக்கொள்ள வேண்டும். அப்படி வளர்த்துக் கொண்டால் சுருக்கமான, எளிதான முறையில் பிரதான தேர்வை எழுதி விடலாம். 

முதன்மைத் தேர்வு தயாராவதற்கும், பிரதான தேர்வுக்கு தயாராவதற்கும் பல வித்தியாசங்கள்  உள்ளன. முதன்மைத் தேர்வு கொள்குறி முறையில் இருப்பதால், 

அதில் அதிகம் சிரமப்பட்டு எழுத வேண்டிய அவசியம் இருக்காது. 

ஆனால் பிரதான தேர்வு விரிவாக எழுதும் வகையில் தான் இருக்கும். ஆகையால் கேள்விக்கு ஏற்றாற்போல் பல்வேறு தகவல்களை தொகுத்து நேர்த்தியாக பதிலை வடிவமைக்க வேண்டும். இதற்காக போதிய பயிற்சியும், பல்வேறு விஷயங்கள்  பற்றிய ஆழமான புரிதல் அவசியம் இருக்க வேண்டும். குறிப்பாக கட்டுரை வடிவிலான பதில்களில், இலக்கண பிழை மற்றும் எழுத்துப் பிழை கண்டிப்பாக இருக்கக்கூடாது. விடைத்தாளில் கொடுக்கப்பட்ட இடத்திற்குள் விடைகளை எழுதுவதற்கு உரிய முறையில் பயிற்சிகளை மேற்கொள்ள வேண்டும். 

முதன்மைத் தேர்வில் 4 பொது அறிவு தாள்களும், ஒரு விருப்பப் பாடம் (Optional Subject) சார்ந்த 2 தாள்களும் இருக்கின்றன. ஒரு கட்டுரை வடிவில் (Essay) தாள் ஒன்றும், ஆங்கில மொழி தாள் ஒன்றும், இந்திய மொழிகளில் ஒரு தாளும் இருக்கின்றன. ஆகமொத்தம், ஒன்பது தாள்கள் இருக்கின்றன. ஒவ்வொரு தாளுக்கும் 250 மதிப்பெண்கள். 

இறுதிப் பட்டியலில் சேர்க்கப்படும் மதிப்பெண் அடிப்படையில், பெர்சனாலிட்டி தேர்வுக்கு (Personality Interview) அழைக்கப்படுவார்கள். இது 275 மதிப்பெண்கள் கொண்டது. இதில் எவ்வளவு மதிப்பெண் எடுத்திருக்கிறீர்கள் என்பதையெல்லாம் கூட்டி அதிக மதிப்பெண் எடுத்திருப்பவர்களின் ரேங்க் பட்டியலில் வெளியிடப்படும். இவ்வாறு பட்டியல் வெளியிடப்படும் போது தேர்வு எழுதுபவர்களின் விருப்பத்தை அடிப்படையாக வைத்தும், பட்டியலில் உள்ள தகுதிநிலையை அடிப்படையாக வைத்தும் பணி ஒதுக்கீடு செய்யப்படும். 

7.3 யு.பி.எஸ்.சி மெயின்ஸ்/ பிரதானத் தேர்வு முறைகள்

தகுதித் தேர்வு:

தாள் – அ

மொழிப்பாடம் – 300 மதிப்பெண்கள்

மாணவர்கள் இந்திய மொழிகளில் ஏதேனும் ஒரு மொழியை தேர்வு செய்யலாம்.

தாள் – ஆ

ஆங்கிலம் – (300 மதிப்பெண்கள்)

தாள் அ மற்றும் ஆ-வில் தேர்ச்சி பெற்றால் மட்டுமே கீழ்காணும் தாள்கள் திருத்தப்படும்.

தாள் – 1

கட்டுரை பாடத்திட்டம் – 250 மதிப்பெண்கள்

மாணவர் விரும்பும் மொழியில் எழுதாலம்

தாள் – 2

பொது அறிவு – 1 (250 மதிப்பெண்கள்)

(இந்திய கலாசாரம் மற்றும் பாரம்பரியம்; உலக வரலாறு மற்றும் புவியியல்)

பாடத்திட்டம் :

இந்தத் தேர்வில் கீழ்க்கண்ட பாடங்களிலிருந்து கேள்விகள் அமையும்.

 •  தேசிய மற்றும் சர்வதேச அளவிலான முக்கிய நடப்புச் செய்திகள் (Current Events of National and International Importance)
 • இந்திய வரலாறு மற்றும் இந்திய தேசிய இயக்கம் குறித்த வரலாறு (History of India and Indian National Movement)
 • இந்திய மற்றும் உலக புவியியல் – இந்திய மற்றும் உலகப் புவியியல் குறித்த இயற்கை அமைப்பு, சமூக, பொருளாதாரத் தகவல்கள் (Indian and World Geography – Physical, Social, Economic, Geography of India and the World)

தாள் – 3

பொது அறிவு – 2 (250 மதிப்பெண்கள்)

(சமூக நீதி, அரசு நிர்வாகம், அரசியல், அரசியலமைப்பு சட்டம் மற்றும் சர்வதேச உறவுகள்)

பாடத்திட்டம் :

 • இந்திய அரசியல் அமைப்பு மற்றும் ஆட்சி அமைப்பு – அரசியலமைப்பு, அரசியல் சட்டம், ஒழுங்கு முறைகள், பஞ்சாயத்து ராஜ், பொதுக்கொள்கைகள், உரிமைகள் மற்றும் கட்டமைப்புகள் (Indian Polity and Governance Constitution, Political System, Panchayati Raj, Public Policy, Rights Issues etc.)
 • சமூக மற்றும் பொருளாதார வளர்ச்சி – ஏழ்மை, சமூக இணைப்பு, மக்கள் பிரிவுகள் மற்றும் சமூக அமைப்புகள் (Economic and Social Development Sustainable Development, Poverty, Inclusion, Demographics, Social Initiatives etc)

தாள் – 4

பொது அறிவு – 3 (250 மதிப்பெண்கள்)

(தொழில்நுட்பம், உயிரியல், சுற்றுச்சூழல், பொருளாதார வளர்ச்சி, பாதுகாப்பு மற்றும் பேரழிவு மேம்பாடு)

பாடத்திட்டம்: 

 • சுற்றுச்சூழல்கள், பருவநிலை மாறுதல்கள் (General Issues on Environmental Ecology, Bio diversity and Climate Change that do not require subject specialization)
 • பொது அறிவியல் (General Science)

தாள் – 5

பொது அறிவு – 4 ( 250 மதிப்பெண்கள்)

(நெறிமுறைகள், நேர்மை மற்றும் தன்னம்பிக்கை)

பொது அறிவு தாள்களின் மொத்த மதிப்பெண்கள் – 1000

பாடத்திட்டம் : உணர்வுப்பூர்வமான அறிவுத்திறன், ஆளுமைத் தன்மை, அறநெறி சிந்தனையாளர்களின் பங்களிப்புகள், குடிமைப் பணிக்கான தகுதி மற்றும் அடிப்படை மதிப்பீடு, பொது நிர்வாகத் திறன் ( Probity in Governance, Emotional intelligence, Aptitude and foundational values for Civil Service, values and Ethics in Public administration) 

தாள் – 6

ஏதேனும் ஒரு பாடத்திட்டம் – 250 மதிப்பெண்கள்

தாள்- 7

ஏதேனும் ஒரு பாடத்திட்டம் – 250 மதிப்பெண்கள்

மொத்த மதிப்பெண்கள் – 1750. பொதுவாக மெயின்ஸ் தேர்வு 3 மணி நேரம் நடத்தப்படும்.

இந்தத் தேர்வில் கீழ்க்கண்ட பாடங்களிலிருந்து கேள்விகள் அமையும்.

 • அறிந்துகொள்ளும் திறன் (Comprehension)
 • இணைந்து பழகும் மற்றும் தகவல்தொடர்புத் திறன்கள் (Interpersonal Skills including Communication Skills)
 • காரணம் அறிதல் மற்றும் பகுத்தாய்வுத் திறன்கள் (Logical Reasoning and Analytical Ability)
 • முடிவெடுத்தல் மற்றும் பிரச்னைகளுக்குத் தீர்வுகாணும் திறன்கள் (Decision Making and Problem Solving Skills)
 • பொதுப் புத்திக்கூர்மைத் திறன் (General Mental Ability)
 • பொது எண் கணிதம் (10ம் வகுப்பு தரத்தில் எண்கள் மற்றும் அதன் உறவுகள்) புள்ளி விவரங்களைப் புரிந்துகொள்ளுதல் [10ம் வகுப்புத் தரம்] (Basic Numeracy [Numbers and their relations, orders of magnitude etc.] [Class X level] Data Interpretation [Charts, Graphs, Tables, Data sufficiency etc. Class X level])
 • ஆங்கில மொழியை அறிந்துகொள்ளும் திறன் [10ம் வகுப்பு தரம்] (English Language Comprehension Skills) (Class X Level)
 • அரசு, புள்ளி விவரங்களைத் தவிர மற்ற புள்ளி விவரங்களைக் குறிப்பிடும்போது ஆதாரங்களைக் குறிப்பிட்டு எழுத வேண்டும்.
 • சிறுசிறு வாக்கியங்களில் பதில்கள் அமைந்தால் நல்லது.
 • தடைப்படாத மொழியில் சிறப்பான நடையில் பதில் எழுதுவது அதிக மதிப்பெண் பெற உதவும்.
 • எந்த ஒரு விரிவான கேள்விக்கும் முன்னுரை மற்றும் முடிவுரை தெளிவாக எழுதப்பட வேண்டும்.
 • விடைகள் எழுதும்போது மிகவும் தெளிவாகவும், விளக்கமாகவும், புரியும்படியும் எழுத வேண்டும்.
 • எல்லைப் பிரச்னை, புவியியல் பற்றிய பதில்கள் எழுதும்போது சிறிய படம் வரைந்து விளக்குவது நல்லது
 • கலைகளின் முக்கிய பரிணாமங்கள், பண்டைக்கால, இடைப்பட்ட, தற்கால இலக்கியம் மற்றும் கட்டிடக்கலைகள்
 • 18-ம் நூற்றாண்டின் இடைப்பட்ட காலத்திலுள்ள நவீன இந்திய வரலாறு முதல் நிகழ்காலம் வரையுள்ள முக்கியமான சம்பவங்கள், பிரமுகர்கள் (Personalities) மற்றும் விளைவுகள்(Issues)
 • சுதந்திரப் போராட்டம் தொடர்பான முக்கிய தகவல்கள், முக்கிய தலைவர்கள் முன்னெடுத்த புரட்சிகள், குறிப்பாக எந்தெந்த ஆண்டுகளில் என்னென்ன சட்டங்கள் கொண்டு வரப்பட்டன.
 • சுதந்திரத்திற்குப் பிந்தைய இந்தியா எப்படியெல்லாம் ஒருங்கிணைக்கப்பட்டு, சீரமைக்கப்பட்டது
 •  18- ம் நூற்றாண்டின் உலக வரலாறு, தொழில்புரட்சி, உலகப்போர்கள், நாடுகளின் எல்லைக்கோடுகளை மறுசீரமைத்தல், காலனி ஆதிக்கம், குடியேற்றத்திலிருந்து வெளியேறுதல் (Decolonisation). கம்யூனிசம், முதலாளித்துவம், பொதுவுடைமை கோட்பாடுகள், அவற்றின் அமைப்பு, சமுதாயத்தில் நிகழ்ந்த தாக்கம்.
 • மக்கள் தொகை சார்ந்த பிரச்னைகள், இந்திய பொருளாதார வளர்ச்சிக்கு வித்திட்ட பெண்கள், பெண்களின் பங்களிப்பு, வறுமை, வளர்ச்சி சார்ந்த தீர்வுகள், நகரமயம் மற்றும் அதற்கான தீர்வுகள்.
 • பெண்கள் அமைப்புகள் மற்றும் பெண்களின் பங்கு, ஜனத்தொகை மற்றும் அவை சார்ந்த பிரச்னைகள், வறுமை, வளர்ச்சி சார்ந்த தீர்வுகள், நகர்மயமாதல், அதற்கான தீர்வுகள்.
 • இந்தியாவின் மீது உலகமயமாகுதலின் தாக்கம்
 • சாதி மனப்பான்மை, சமூக மேம்பாடு, மதச்சார்பற்ற நிலை
 • உலகளவிலான இயற்கை வளங்கள் (இந்திய துணைக்கண்டம் மற்றும் தெற்காசியாவை உள்ளடக்கியது) விவசாயம், தொழில், சேவைப்பிரிவு சார்ந்த தொழில்கள்
 • உலகளவில் பரவிக் கிடக்கும் இயற்கை வளங்கள் (தெற்காசியா மற்றும் இந்திய துணைக்கண்டத்தை உள்ளடக்கியது) விவசாயம், தொழில், சேவைப்பிரிவு சார்ந்த தொழில்கள் இந்தியா மற்றும் உலகு தழுவியது.
 • தாவர இனம், விலங்கினங்கள், சூழல் மற்றும் மாற்றங்கள் ஆகியவை பொது அறிவு முதல் தாளில் கொடுக்கப்பட்டுள்ளது.

பொதுவாக சிவில் சர்வீஸ் தேர்வுக்கு ( UPSC preparation in tamil )  தயாராகும் போது, தேர்வர்கள், உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் ஆரோக்கியமாக இருக்க வேண்டியது அவசியம். தினமும் குறைந்தது 6 மணி நேரம் தூங்க வேண்டும். உரிய நேரத்தில் சாப்பிடுவதும், தூங்குவதும், மன அழுத்தம் ஏற்படாமல் தவிர்ப்பதற்கான வழிகள்.

ஆட்சிப் பணி தேர்வை எழுதுவதால், உங்கள் அன்றாட செயல்பாடுகளை மாற்றிக் கொண்டு, எப்போதும் படித்துக் கொண்டே இருக்க வேண்டும் என்பது கிடையாது. முதன்மைத் தேர்வுக்கு சில வாரங்கள் முன்பாக, கூடுதல் கவனம் செலுத்தினாலே போதுமானது. அதே நேரம் முதன்மைத் தேர்வில் வெற்றி பெற்று பிரதான தேர்வுக்கு தயாராகும் போது, கூடுதல் பயிற்சியும், அதிக நேரம் படிப்பதும் அவசியம் என்பதை மறந்து விடலாகாது.

எது எப்படி மாறினாலும், தினசரி குறைந்தபட்சம் 5 மணி நேரம் சுறுசுறுப்புடன் படிக்க வேண்டியது அவசியம். அதில் 3 மணி நேரத்தை படிப்பதற்கும் 2 மணி நேரத்தை குறிப்புகள் எடுப்பதற்கும் பிரித்துக் கொண்டு, செயல்பட வேண்டும்.

நேர்முகத் தேர்வு

பிரதானத் தேர்வில் தேர்வாணையத்தால் தீர்மானிக்கப்பட்ட குறைந்தபட்ச மதிப்பெண்களை பெற்றவர்கள் நேர்முகத் தேர்வுக்கு அழைக்கப்படுவார்கள். இந்த நேர்முகத்தேர்வு 300 மதிப்பெண்களைக் கொண்டது. ஆட்சிப் பணி பதவிக்கு நீங்கள் எந்த விதத்தில் தகுதியானவர் என்பது தான் நேர்முகத் தேர்வில் மதிப்பீடு செய்யப்படும். அதில் வெற்றி பெற்றவர்கள்…

1.இந்திய ஆட்சிப் பணி (Indian Administrative Service)

2.இந்திய அயல்நாட்டுப் பணி (Indian Foreign Service)

3.இந்திய காவல் பணி (Indian Police Service)

4.இந்திய அஞ்சலகத் தந்திக் கணக்குகள் மற்றும் நிதி பணி, பிரிவு – A  (Indian P & T Accounts & Finance Service, Group – A)

5. இந்திய கணக்குத் தணிக்கை மற்றும் கணக்கியல் பணி, பிரிவு – A  (Indian Audit & Accounts Service, Group – A)

6.இந்திய சுங்கம் மற்றும் கலால் வரி பணி, பிரிவு – A  (Indian Customs & Central Excise Service, Group – A)

7.இந்திய பாதுகாப்புத்துறை கணக்குப் பணி, பிரிவு – A  (Indian Defence Accounts Service, Group – A)

8.இந்திய வருவாய் பணி, பிரிவு – A  (Indian Revenue Service, Group – A)

9.இந்தியத் துப்பாக்கித் தொழிற்சாலைகள் பணிபிரிவு – A  (உதவி மேலாளர், தொழில் நுட்பம் சாராதது) (Indian Ordinance Factories Service, Group ‘A’ Assistant Works Manager, Non-Technical)

10.இந்திய அஞ்சல் பணி, பிரிவு – A  (Indian Postal Service, Group – A)

11.இந்தியக் குடிமைக் கணக்குப்பணி, பிரிவு – A (Indian Civil Accounts Service, Group – A)

12.இந்திய இரயில்வே போக்குவரத்து, பிரிவு – A (Indian Railway Traffic Service, Group – A)

13.இந்திய இரயில்வே கணக்குப்பணி, பிரிவு – A (Indian Railway Accounts Service, Group – A)

14.இந்திய இரயில்வே பணியாளர்கள் பணி, பிரிவு – A (Indian Railway Personnel Service, Group – A)

15.இரயில்வே பாதுகாப்புப் படையில், உதவிப் பாதுகாவல் அலுவலர் பிரிவு – A பதவிகள் (Posts of Assistant Security Officer, Group – A in Railway Protection Force)

16.இந்தியப் பாதுகாப்பு நிலைகள் பணி, பிரிவு – A  (Indian Defence Estates Service, Group – A) 

17.இந்திய தகவல் தொடர்புப் பணி, (இளநிலை) பிரிவு – A (Indian Information Service, (Junior Grade) Group – A)

18.மையத்தொழிலகப் பாதுகாப்புப் படையில் உதவி ஆணையாளர், பிரிவு – A பதவிகள் (Posts of Assistant Commandant Group – A in Central Industrial Security Force)

19.மைய அரசு செயலகப்பணி, பிரிவு – B (பிரிவு அலுவலர் நிலை)

20.புகைவண்டி வாரியச் செயலகப் பணி, பிரிவு – B (பிரிவு அலுவலர் நிலை)

21.ஆயுதப்படை தலைமையகக் குடிமைப் பணி, பிரிவு – B  (குடிமக்கள் பணியாள் உதவி அலுவலர் நிலை)

22.சுங்கத்துறை மதிப்பீட்டாளர் பணி, பிரிவு – B 

23.தில்லி, அந்தமான்-நிகோபார் தீவுகள், லட்சத்தீவு, டையூ- டாமன், டாட்ரா மற்றும் நாகர்ஹவளி குடிமை பணி, பிரிவு – B 

24.தில்லி, அந்தமான்- நிகோபார் தீவுகள், லட்சத்தீவு, டையூ- டாமன், டாட்ரா மற்றும் நாகர்ஹவளி காவல் பணி,  பிரிவு – B 

25.புதுச்சேரி குடிமைப்பணி, பிரிவு – B 

26.புதுச்சேரி காவல் பணி, பிரிவு – B 

போன்ற 26 பணிகளில் ஏதேனும் ஒன்றில் நியமிப்பர்.

ஐஏஎஸ், ஐபிஎஸ், ஐஎப்எஸ் இடையே உள்ள வேறுபாடுகள்

 • ஐ.ஏ.எஸ் (I.A.S.) எனப்படும் ‘இந்திய ஆட்சிப் பணிக்கு’ (Indian Administrative Service) தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள், மாவட்ட கலெக்டராகவும், மாநிலப் பொதுத்துறை நிறுவனங்களின் தலைவர், செயலாளர்களாகவும் நியமிக்கப்படுவார்கள். மேலும், மத்திய அரசின் பல்வேறு பணிகளில் தற்காலிகமாகப் பணிபுரிவதற்காகவும் பணி மாற்றம் செய்யப்படுவார்கள்.
 • ஐ.பி.எஸ்.’ (I.P.S) எனப்படும் ‘இந்தியன் போலீஸ் சர்வீஸ்’ (Indian Police Service) என்பது நாட்டின் சட்ட ஒழுங்கை நிலை நாட்டுவதற்காக ஏற்படுத்தப்பட்ட துறை ஆகும். சிவில் சர்வீசஸ் தேர்வில் வெற்றி பெற்றவர்கள் மத்திய, மாநில அரசுகளில் ஐ.பி.எஸ். அதிகாரிகளாகப் பணிபுரிய வாய்ப்புண்டு. இவர்கள் காவல் துறையில் சேர்ந்ததும், தொடக்க காலத்தில், ‘உதவிக் காவல் கண்காணிப்பாளர்’ அளவில் நியமிக்கப்படுவார்கள்.
 • ஐ.பி.எஸ். பணிக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் மத்திய அரசின் பல்வேறு அமைப்புகளான CBI  (Central Bureau of Investigation), CRPF (Central Reserve Police Force), BSF (Border Security Force), RAW (Research and Analysis  Wing), Central Industrial Security Force (CSIF) Intelligence Bureau (IB) ஆகியவற்றில் பணியாற்றும் வாய்ப்புகள் உள்ளன
 • ‘ஐ.எப்.எஸ்.’ (I.F.S.) எனப்படும் ‘இந்திய அயல்நாட்டுப் பணிக்கு’ (Indian Foreign Service) தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் பல்வேறு நாடுகளிலுள்ள இந்தியத் தூதரகங்களில் அதிகாரியாகப் பணியாற்றலாம். இந்த அதிகாரிப் பணியில் சேர்ந்தவர்களுக்குப் பல நாடுகளின் அரசியல், சமூகம், பொருளாதாரம், பண்பாடு பற்றி தெரிந்துகொள்ள வாய்ப்புண்டு. ஐக்கிய நாட்டு சபை, உலக வங்கி, சார்க் நாடுகளின் அமைப்பு, யுனெஸ்கோ ஆகிய அமைப்புகளில் பணிபுரிவதற்கும் வாய்ப்புண்டு. பாஸ்போர்ட் அதிகாரிகள் பணிக்கும் இவர்கள் நியமிக்கப்படுவார்கள்.
 • ‘இந்திய வருவாய்ப் பணி’ (I.R.S) எனப்படும் ‘Indian Revenue Service’ பணி என்பது வருமான வரி சம்பந்தப்பட்ட பணியாகும். இந்தப் பணிக்கு தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் தொடக்கக் காலத்தில் Assistant Commissioner of Income Tax பணியில் அமர்த்தப்படுவார்கள். அதன் பின்னர் பல்வேறு பதவி உயர்வுக்குப் பின்பு Chief Commissioner of Income Tax என்ற பொறுப்பான பதவி வகிக்கவும் வாய்ப்புள்ளது.
 • சுங்கம் மற்றும் கலால் வரித்துறை பணிக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் ஆரம்பத்தில் சுங்க வரித்துறையில் Assistant Commissioner பணியில் அமர்த்தப்படுவார்கள்.
 • பதவி உயர்வு பெற்றபின்பு முக்கிய பதவியான Chief Commissioner of Customs and Central Excise, Chairman, Board of Direct Taxes, Chairman, Board of Customs and Central Excise போன்ற உயர்பணிகளையும் பெற வாய்ப்புள்ளது.

யுபிஎஸ்சி - 2019

2019ஆம் ஆண்டு நடைபெறக் கூடிய சிவில் சர்வீஸ் தேர்வு தேதிகளை ஏற்கனவே அறிவித்து விட்டது.

1) இந்திய மொழிகளில் ஏதேனும் ஒன்று (300 மதிப்பெண்கள்). 

2) ஆங்கிலம் (300 மதிப்பெண்கள்). இதில், இரண்டு வினா தாள்களில் கண்டிப்பாக எழுத வேண்டும். இதில் பெறப்படும் மதிப்பெண்கள் இறுதி தேர்வுப்பட்டியலில் இணைக்கப்படாது.

3) யு.பி.எஸ்.சி பாடத்திட்டத்தின்படி, நான்கு பொது அறிவு கேள்வித்தாள் (தலா 250 மதிப்பெண்கள்) உள்ளன. இதன்படி, 1000 மதிப்பெண்கள் இந்த கேள்வித்தாள்களுக்கு உண்டு.

4) இறுதித் தேர்வு (நேர்முகத் தேர்வு- பர்சனாலிட்டி தேர்வு) – 275 மதிப்பெண்கள் கொண்டது. 

யு.பி.எஸ்.சி தேர்வுக்கு உதவும் புத்தகங்கள்

11.1 முதல்நிலைத் தேர்வுக்கு உதவும் புத்தகங்கள்

முதல்நிலைத் தேர்வுக்கு படிக்க வேண்டிய புத்தகங்கள் குறித்து இங்கே பார்க்கலாம்.

1. யோஜனா ( Yojana )

2. குருஷேத்ரா ( Kurukshetra )

3. ஹிஸ்டரி ஆஃப் மெடிவல் இந்தியா ( History Of Medieval India )

4. ஹிஸ்டரி ஆஃப் மாடர்ன் இந்தியா ( History Of Modern India )

5. இந்தியாஸ் ஏன்ஷியன்ட் பாஸ்ட் ( India’s Ancient Past )

6. இந்தியாஸ் ஸ்ட்ரகுள் ஃபார் இண்டிபெண்ட்ன்ஸ் (India’s Struggle For Independence )

7. ஜியாகிரபி ஆஃப் இந்தியா ( Geography of India )

8. இந்தியன் அண்டு வேர்ல்டு ஜியாகிரபி ஆஃப் சிவில் சர்வீசஸ் ( Indian and World Geography for Civil Services )

9. ஃபேக்ட்ஸ் ஆஃப் இந்தியன் கல்ச்சர் ( Facts of Indian Culture )

10. இந்தியன் எக்கானாமி ( Indian Economy )

11. சயின்ஸ் அண்டு டெக்னாலஜி இன் இந்தியா ( Science and Technology in India )

12. என்விரான்மெண்ட்டல் ஸ்டடிஸ் ஃபிரம் க்ரைசிஸ் டூ கியூர் ( Environmental Studies from Crisis to Cure )

13. இந்தியன் பாலிட்டி – லஷ்மிகாந்த் ( Indian Polity – Laxmikanth )

14. இந்தியா இயர் புக் ( India Year Book )

15. ஆக்ஸ்ஃபொர்டு ஸ்கூல் அட்லாஸ் ( Oxford School Atlas )

16. தி வொண்டர் தட் வாஸ் இந்தியா ( The Wonder That Was India )

17. மனோரமா இயர்புக் ( Manorama Yearbook)

11.2 மெயின்ஸ் தேர்வுக்கு உதவும் புத்தகங்கள

மெயின்ஸ் தேர்வுக்கு படிக்க வேண்டிய புத்தகங்கள் குறித்து கீழே பார்க்கலாம்.

1. சோஷியல் புராப்லம்ஸ் இன் இந்தியா ( Social Problems In India )

2. இந்தியா ஆஃப்டர் காந்தி ( India After Gandhi )

3. இந்தியா அண்டு தி வேர்ல்டு – சுரேந்திர குமார் ( India and the World by Surendra Kumar )

4. கவர்னன்ஸ் இன் இந்தியா ஃபார் சிஎஸ்இ ( Governance in India for CSE )

5. எத்திக்ஸ், இன்டகிரிட்டி அண்டு ஆப்டிடியூட் ஃபார் சிவில் சர்வீசஸ் மெயின்ஸ்( Ethics, Integrity and Aptitude for Civil Services Mains )

6. ஹிஸ்டரி ஆஃப் மாடர்ன் இந்தியா ( History of Modern World )

7. பேஸ் இண்டிகா – ஷசி தரூர் ( Pax Indica – Shashi Tharoor )

8. கிட் ஆஃப் இன்டர்வியூ ( Kit of Interviews )

9. இந்தியாஸ் நேஷனல் செக்யூரிட்டி: ஏ ரீடர் ( India’s National Security: A Reader )

10. இன்டர்வியூ கிராக்கர் ( Interview Cracker )

11. காண்ட்டம்டரி எஸ்ஸேஸ் – ரமேஷ் சிங் ( Contemporary Essays by Ramesh Singh )

12. 151 எஸ்ஸேஸ் ஃபார் யூபிஎஸ்சி மெயின்ஸ் ( 151 Essays For UPSC Mains )

13. சிவில் சர்வீசஸ் இன்டர்வியூ : ஹவ் டூ எக்ஸ்சல் ( Civil Services Interview: How to Excel )

14. இன்டர்வியூஸ் தி லாஸ்ட் பேசிக் டிப்ஸ் ஆன் ஃபேசிங் சிவில் சர்வீசஸ்

15. பெர்சனாலிட்டி டெஸ்ட் ( Interviews The Last Basic Tips On facing Civil Services Personality Test )

16. சேலஞ்சஸ் டூ இன்டகிரல் ஸ்டடீஸ் ( Challenges to Internal Security of India )

17. ஏ காம்பெண்டியம் ஆஃப் எஸ்ஸேஸ் ( A Compendium of Essays )

11.3 விருப்பப்பாடங்களுக்கு படிக்க வேண்டிய புத்தகங்கள்

விருப்பப்பாடங்கள் தேர்வு செய்த பின் எந்தெந்த புத்தகங்களை படிக்கலாம் என்று கீழே பார்க்கலாம்

இந்திய வரலாறு

1. ஏன்ஷியன்ட், மெடிவல் அண்டு மாடர்ன் இந்தியா

2. ஆர்.அக்னி கோத்ரி கைடு

3. ஏன்ஷியன்ட் இந்தியா வொண்டர் தட் வாஸ் இந்தியா ஏ.எல். பாஷ்யம்.

4. மாடர்ன் இந்தியா குரோவர் அண்டு குரோவர்

5. கிருஷ்ண ரெட்டி கைடு

6. சுமித் சர்க்காரின் புத்தகத்தையும் படிக்கலாம்.

வணிகவியல்

1. ஆடிட்டிங் பி.என். டான்டன்.

2. காமர்ஸ் மேனுவல் புக்கைவ்.

3. பிரின்சிபிள்ஸ் அண்டு பிராக்டீசஸ் ஆப் மேனேஜ்மென்ட் எல்.எம். பிரசாத்

4. கம்பெனி லா என்.டி. கபூர்

5. நிர்வாகம் சி.பி. குப்தா

சோசியாலஜி

1. இந்தியன் சோஷியல் சிஸ்டம் ராம் அகுஜா

2. பாப்புலேஷன் ஸ்டடீஸ் ஆஷா பென்டே

3. சங்கர் ராவ்

4. சோஷியாலஜி பிராபலம்ஸ் டு த லிடரேச்சர் டி.ஆர். போட்டோமோர்

5. ஜவகர் கைடு

6. சோஷியாலஜி தீம் அண்டு பெர்ஸ்பெக்டிவ் ஹரம்பஸ் அண்டு ஹெரால்டு

7. சோஷியல் மூமென்ட்ஸ் எம்.எஸ்.ஏ. ராவ்

8. தில்லான் கைடு

பொலிடிகல் சயின்ஸ்

1. இந்தியன் பொலிடி பிரதியோகிதா தார்பன், லட்சுமிகாந்த்

2. தில்லான் கைடு

3. பொலிடிகல் தியரி எட்டி ஆசீர்வாதம்

4. ஜி.கே. காப்

5. விஸார்டு புக்

பொது நிர்வாகம்

1. அட்மினிஸ்டிரேட்டிவ் திங்கர்ஸ் பிரசாத் அண்டு பிரசாத்

2. பப்ளிக் அட்மினிஸ்டிரேஷன் லட்சுமிகாந்த்

3. காம்பட்டிசன் ரெப்ரஷர்ஸ்

4. பப்ளிக் அட்மினிஸ்டிரேஷன் பாடியா

5. கேள்வித்தாள் தொகுப்பு விக்ரம் சிங்

6. பப்ளிக் அட்மினிஸ்டிரேஷன் எஸ். ஆர். மகேஸ்வரி

புவியியல்

1. சுராஸ், டாடா மெக்கிரா ஹில், ஸ்பெக்ட்ரம் அல்லது பியர்சன் என ஏதாவது ஒரு

2. நிறுவனத்தின் ஜெனரல் ஸ்டடீஸ் மேனுவல்

3. பிசிகல் ஜியாகிரபி சவீந்திரா சிங்

4. ஹியூமன் ஜியாகிரபி மஜித் ஹூசைன்

5. ரீஜனல் ஜியாகிரபி சித்தார்த்தா வரைபடங்கள்

6. இந்திய ஜியாகிரபி குளார்

7. ஜியாகிரபி ஆர்.எல். சிங்

சிறந்த ஐஏஎஸ் பயிற்சி மையங்கள்

புதுதில்லி மற்றும் சென்னையில் ஐ.ஏ.எஸ்., கோச்சிங் வகுப்புகளை நடத்தும் பயிற்சி மையங்கள் சிலவற்றை இங்கே பார்க்கலாம்

12.1 டெல்லியில் உள்ள பயிற்சி மையங்கள்

1. வஜிராம் அண்டு ரவி, எண் : 9-பி, பாடா பசார் மார்க், பழைய ராஜிந்தர் நகர், புதுதில்லி, தில்லி – 110060

2. புளூட்டஸ் ( ஆன்லைன் கோச்சிங்)

3. அனலாக் ஐஏஎஸ் அகாடமி, 57/12, 3-வது தளம், பாடா பசார் மார்க், கரோல் பாக் மெட்ரோ ஸ்டேஷன் அருகில், புதுதில்லி, தில்லி – 110060

4. நெக்ஸ்ட் ஐஏஎஸ் கோச்சிங், எண் -6, தரைதளம், சல்வான் பள்ளி கேட் நம். 2 அருகில், பழைய ராஜிந்தர் நகர், புதுதில்லி, தில்லி – 110060

5. ஏஎல்எஸ் கோச்சிங், எண் -1, 2-வது தளம், அகர்வால் ஆட்டோ மால் ஏ பிளாக், ஷாலிமார் பிளேஸ் டிஸ்டிரிக்ட் சென்டர், அவுட்டர் ரிங் ரோடு, தில்லி – 110088

12.2 சென்னையில் உள்ள பயிற்சி மையங்கள்

1. ஷங்கர் ஐஏஎஸ் அகாடமி, கதவு எண் – 18, பழைய புளாட் எண் – 109, புதிய புளாட் எண் – 259, 4-வது அவன்யூ, ஷாந்தி காலனி, அண்ணா நகர், சென்னை, தமிழ்நாடு – 600040

2. கணேஷ் ஐஏஎஸ் அகாடமி, எண் -7, முதல் தளம், சிஎல்சி வொர்க்ஸ் ரோடு, நாகப்பா நகர், குரோம்பேட்டை, சென்னை, தமிழ்நாடு – 600044

3. ஆஃபிசர்ஸ் ஐஏஎஸ் அகாடமி, எண் – 935, 6-வது அவன்யூ, ஐஸ்வர்யா காலனி, 1 புளாக், அண்ணா நகர், சென்னை, தமிழ்நாடு- 600040

4. ஏஐசிஎஸ் ( தமிழக அரசு) எண்- 163/1, பிஎஸ் குமாரசாமி ராஜா ரோடு, ராஜா அண்ணாமலைபுரம், சென்னை, தமிழ்நாடு – 600028

5. மனிதநேயம் ஐஏஎஸ் அகாடமி, எண்- எண்- 28, சிஐடி முதல் மெயின் ரோடு, மேற்கு சிஐடி நகர் சிஐடி நகர், சென்னை, தமிழ்நாடு – 600035

6. ஸ்மார்ட் லீடர்ஸ் ஐஏஎஸ் அகாடமி, எண் – 9, புளாட் எண் -2163, 12வது மெயின் ரோடு, எல் புளாக், மேற்கு அண்ணா நகர், சென்னை, தமிழ்நாடு – 600040

7. கிராக்கிங் ஐஏஎஸ் அகாடமி, எண்- 59/1228, 2-வது தளம், 18-வது மெயின் ரோடு, அண்ணா நகர், சென்னை, தமிழ்நாடு – 600040

8. பெரியார் ஐஏஎஸ் அகாடமி, எண்- பெரியார் திடல், 54/1, ஈவிகே சம்பத் சாலை , வேப்பேரி, சென்னை – 600007

9. சக்சஸ் ஐஏஎஸ் அகாடமி, எண்- 4F, 13 வது புளாக், ஜெயின்ஸ் கிரீன் ஏக்கர்ஸ், தர்கா ரோடு, ஜமீன் பல்லாவரம், சென்னை, தமிழ்நாடு – 600043

10. சங்கம் ஐஏஎஸ் ஸ்டடி சர்க்கிள், எண்- 16/19 கோதாவரி தெரு, பழனியப்பா நகர், ஆழ்வார் திருநகர் பேருந்து நிலையம், வளசரவாக்கம், சென்னை-600087

இலவச பயிற்சி

ஐ.ஏ.எஸ், ஐபிஎஸ் தேர்வுக்கு ( best way to crack UPSC in tamil ) பயிற்சிபெறும் மாணவர்கள் மெயின்ஸ் தேர்விற்கு பயிற்சிப்பெற தமிழக அரசு சார்பில் சென்னை கிரீன்வேஸ் சாலையில் தங்குமிடத்துடன் கூடிய இலவசப் பயிற்சி மையம் நடத்தப்படுகின்றது. இந்த மையத்தில் 225 பேர் தங்கிப் பயில உண்டு, உறைவிட வசதிகள் உள்ளன மெயின்ஸ் தேர்வு எழுதுவதற்கு மாதம் ஒன்றுக்கு 3 ஆயிரம் ரூபாய் ஊக்கத்தொகையும் அளிக்கப்படுகிறது. இப்பயிற்சி மையத்தில் தங்கும் வசதி, உணவு விடுதி, நூலகம், வகுப்பறைகள் போன்ற அனைத்து வசதிகளும் உள்ளன. மாணவர்கள் இலவசமாக உணவருந்தவும், தங்கி படிக்கவும் இங்கு வசதிகள் உள்ளன. அதேபோல் தரமான பயிற்சியாளர்களைக் கொண்டும் இங்கு பயிற்சி அளிக்கப்படுகிறது. மாதிரித் தேர்வுகளும் நடத்தப்படுகின்றன. தமிழக மாணவர்கள் எங்கு பயின்று முதல்நிலைத் தேர்வில் தேர்ச்சி பெற்றிருந்தாலும் இந்த மையத்தில் மெயின்ஸ் தேர்விற்கு பயிற்சி பெற விண்ணப்பிக்கலாம். முதல்நிலை தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்ட 2 நாட்களுக்குள் www.civilservicecoaching.com என்ற இணையதளத்தில் தங்கள் பெயர்களை பதிவுசெய்து கொள்ளலாம்.

பட்டப்படிப்பு படிக்கும் போதே போட்டித் தேர்வுகளுக்கு ( how to crack UPSC in tamil ) தயாராகும் வகையில் கல்லூரிகள், பல்கலைக்கழகங்களில் பல்கலைக்கழக மானியக்குழுவின் உதவியோடு பல பயிற்சிகளும் வழங்கப்படுகின்றன. அவற்றைத் தக்க முறையில் பயன்படுத்தினால் நிச்சயம் ஐஏஎஸ் கனவு நனவாகும்.